முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலைய ரிசப்ஷனிஸ்ட்களுக்கு லேப்டாப்!

காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலைய ரிசப்ஷனிஸ்ட்களுக்கு லேப்டாப்!

மாதிரி படம்

மாதிரி படம்

Kanchipuram District Police Station Receptionists Provided Laptops | காஞ்சிபுரம் மாவட்டத்தில்‌ பொதுமக்கள் காவல்துறைக்கு தங்கள் குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்க Petition Enquiry and Tracking System என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரம் மாவட்டத்தில்‌ பொதுமக்கள் காவல்துறைக்கு தங்கள் குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்க Petition Enquiry and Tracking System என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை கண்காணிக்க காவல் நிலைய வரவேற்பாளர்களுக்கு மடிக்கணினியை காஞ்சிபுரம் சரகம் காவல்துறை துணைத் தலைவர் P.பகலவன்,IPS வழங்கினார்.

காஞ்சிபுரம் காவல் மாவட்டத்தில் 2 உட்கோட்டங்களும், 12 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களும், 2 மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன. அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களின் வசதிக்கேற்ப, அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, எளிதாக பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறவும் அவற்றை சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அனுப்பி மக்களின் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் Petition Enquiry and Tracking System என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலைய ரிசப்ஷனிஸ்ட்களுக்கு லேப்டாப்

இச்செயலியின் மூலம் முதலாவதாக,மனு கொடுப்பவரின் விவரமும்,மனுவின் தன்மை பற்றியும் இந்த செயலியில் பதிவேற்றம் செய்து அதற்கென தனியாக ஒரு மனு எண் (Complaint ID) ஒதுக்கப்படும்.இரண்டாவதாக,அம்மனுவினை விசாரிக்கும் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு அம்மனுவின் மீது எடுக்கபட்ட நடவடிக்கையின் விவரத்தை பதிவேற்றம் செய்யப்பட்டு பொதுமக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட விவரத்தை தெரிவிக்கப்படும்.

இதையும் படிங்க : ஜல்ஜீவன் மிஷன் திட்டம்.. காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு மத்திய அரசு விருது!

இதற்கென,காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் தனித்தனியாக மொத்தம் 14 வரவேற்பாளர்கள் (Receptionist) பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் மனுக்களின் விவரத்தினையும் அதற்கான தீர்வினையும் எளிதாகவும் விரைவாகவும் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் பெற்றுக் கொள்ள வழிவகை செய்ய இயலும்.

மேலும்,அவ்வாறு கொடுத்த புகார் மனுக்களின் மீது முறையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதா எனவும், மனுவில் கொடுக்கப்பட்ட  அனைத்து எதிர்மனுதாரர்களையும் முறையாக அழைத்து விசாரணை செய்யப்பட்டதா எனவும், விசாரணை திருப்திகரமாக இருந்ததா எனவும்,அதைபதிவு செய்து மாவட்ட தலைமையகத்தில் நியமிக்கப்படும் அலுவலர்களால் இதே செயலியின் மூலம் பதிவேற்றம்செய்யப்பட்டுகாவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரடியாக கண்காணிக்கப்படும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதன் தொடக்கமாக,காஞ்சிபுரம் சரகம் காவல்துறை துணைத் தலைவர் P.பகலவன்,IPS தலைமையில் காவல் நிலைய வரவேற்பாளர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வினோத் சாந்தாராம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    First published:

    Tags: Kancheepuram, Kanchipuram, Local News