முகப்பு /காஞ்சிபுரம் /

தமிழ்.. தமிழ்.. என பேசிய சிறுமி.. மகிழ்ச்சியில் திளைத்த காஞ்சிபுரம் ஆட்சியர்..!

தமிழ்.. தமிழ்.. என பேசிய சிறுமி.. மகிழ்ச்சியில் திளைத்த காஞ்சிபுரம் ஆட்சியர்..!

X
சிறுமியிடம்

சிறுமியிடம் உரையாடும் ஆட்சியர் 

Kanchipuram News | காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியரிடம் பேசிய சிறுமியால் அங்கிருந்த மக்களிடம் ஏற்பட்ட சிரிப்பலை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

மார்ச் 8ஆம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு காஞ்சிபுரம் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது, சிறப்பு விருந்தினராக வருகைப்புரிந்த மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை அங்கிருந்த பெண்கள் அனைவரும் மலர்களை வழங்கி வரவேற்றனர். அப்போது 5 வயது‌ சிறுமி மாவட்ட ஆட்சியர் ஆர்த்திக்கு பூக்களை வழங்கினார்.

இதனைக் கண்ட ஆட்சியர் சிறுமியை அழைத்து பெயர் என்னவென்று கேட்டார். அதற்கு எனது பெயர் ஹெர்சிபா என்று மழலை குரலில் கூறினார். பின்னர், என்ன வகுப்பு படிக்கிறாய் என்ற கேட்டதற்கு இன்னும் பள்ளிக்கு செல்லவில்லை என சிறுமி கூறியவுடன் ஆட்சியர் ஆர்த்தி சிறுமியின் தாயை அழைத்து ஏன் இன்னும் பள்ளிக்கு அனுப்பவில்லை என கேட்டார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதற்கு அவரது தாய்  அங்கன்வாடிக்கு சென்று கொண்டிருக்கிறார் என கூறியதும் ஆட்சியர் ஆர்த்தி சிறுமியிடம் பள்ளிக்கு செல்லவில்லை என ஏன் சொன்னாய் என்று கேட்டார்.

அதற்கு அவரது தாய் தன் மகளுக்கு தமிழ் அந்தளவிற்கு தெரியாது என்று கூறினார். பின்னர், ஆட்சியர் "போலோ" என்று ஹிந்தி மொழி பேசியதற்கு உடனே அச்சிறுமி "தமிழ்".. "தமிழ்" என்று கூறியது அங்கிருந்தவர்களிடம் மகிழ்ச்சியையும், சிரிப்பலையையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

First published:

Tags: Kancheepuram, Local News