முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.. ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

காஞ்சிபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.. ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

Kanchipuram job fair | மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2023-ம் ஆண்டு மே மாதத்தில் 19.05.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர்.

அதுசமயம் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ,12-வது மற்றும் 10-ஆம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

எனவே, 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 19.05.2023 அன்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறும் மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Job Fair, Kanchipuram, Local News