முகப்பு /காஞ்சிபுரம் /

சேர்த்து வைத்த பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய மாற்றுத்திறனாளி மாணவிகள்!

சேர்த்து வைத்த பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய மாற்றுத்திறனாளி மாணவிகள்!

X
பணத்தை

பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கும் மாற்றுத்திறனாளி மாணவிகள்

Kanchipuram news: காஞ்சிபுரத்தில் நிவாரண நிதிக்கு பணம் வழங்கிய மாணவிகளுக்கு ஆட்சியர் பாராட்டுக்களை தெரிவித்தார்.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரத்தில் சிறுக சிறுக சேமித்து வைத்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளி சிறுமிகள் வழங்கினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் களியனூர் கிராமத்தில் வசிப்பவர்கள் ஆறுமுகம்-வடிவுக்கரசி தம்பதி. இவர்களுக்கு ஜென்னி, சாவித்திரி என இரு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் மகனும்உள்ளனர்.  இவர்களில் ஜென்னி, சாவித்திரி, ஆகிய இருவரும், பிறவிலேயே வாய் பேச முடியாத, காது கேளாத, மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்.

சிறுமி ஜென்னி சென்னை காது கேளாதோர் பள்ளியில் 12ஆம் வகுப்பும், சாவித்திரி காஞ்சிபுரம் காது கேளாதோர் பள்ளியிலும் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவிகள் இருவரும் தங்களின் தாய், தந்தை மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் அவ்வப்போது வழங்கும் பரிசு பணத்தை உண்டியலில் போட்டு சிறுக சேமித்து வைத்து வந்துள்ளனர்.

தங்களைப் போன்ற மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு வழங்கி உதவிட முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும், தாங்கள் சேமித்து வைத்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கிட முடிவு செய்தனர்.

அதன்படி தாய், தந்தை இருவருடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாற்று திறனாளி மாணவிகள் இருவரும் தலா ஐந்தாயிரம் ரூபாய் வீதம் 10 ஆயிரம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அவர்களிடம் வழங்கினார்கள். வாய் பேச, காது கேட்க முடியாத மாற்றுத்திறனாளி சகோதரிகள் செய்த தன்னிகரில்லா சேவையை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பாராட்டி கௌரவித்தார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Kanchipuram, Local News