முகப்பு /காஞ்சிபுரம் /

25 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி 49வது வார்டு மக்கள்..

25 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி 49வது வார்டு மக்கள்..

X
25

25 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி 49வது வார்டு மக்கள்.

Kanchipuram News | காஞ்சிபுரம் மாநகராட்சி 49வது வார்டு மக்கள் தங்களது 25 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் உள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சியின் 49வது வார்டு காந்தி நகர் - ஸ்ரீ பெருந்தேவி நகர் இடையே செல்லும் கால்வாயில், மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு காரணமாக ஸ்ரீபெருந்தேவி நகர் மக்கள் காந்திநகர் வழியாக காஞ்சி மாநகருக்குள் தங்களுடைய அன்றாட தேவைகளுக்காகவும், அவசர தேவைகளுக்காகவும் வந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இதனால், இந்த கால்வாய் மீது இணைப்பு பாலம் அமைத்து தர வேண்டும் என 25 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் செலவில் காந்திநகர் - ஸ்ரீ பெருந்தேவி நகர் இடையே கால்வாய் மீது இணைப்பு பாலம் கட்டும் பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பூமி பூஜை நடைபெற்று முடிந்தது. இதனைத்தொடர்ந்து, இணைப்பு பாலம் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டது. இதனை, உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் ஆகியோர் இந்த புதிய பாலத்தை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தனர்.

இதையும் படிங்க : 5 தலை நாகம் பாதுகாத்து வரும் 2,000 ஆண்டுகள் பழமையான போடி கீழச்சொக்கநாதர் கோயில் பற்றி தெரியுமா?

இந்நிகழ்ச்சியில், மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன், மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன், மாமன்ற உறுப்பினர் பூங்கொடி தசரதன், மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Kanchipuram, Local News