முகப்பு /காஞ்சிபுரம் /

மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை 30 நிமிடத்தில் நிறைவேற்றிய காஞ்சிபுரம் கலெக்டர்!

மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை 30 நிமிடத்தில் நிறைவேற்றிய காஞ்சிபுரம் கலெக்டர்!

X
மாற்றுத்திறனாளியின்

மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை நிறைவேற்றிய கலெக்டர்

Kanchipuram News : சுய தொழில் தொடங்க மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு 30 நிமிடத்தில் காசோலை வழங்கி உடன் நடவடிக்கை மேற்கொண்டார் காஞ்சிபுரம் கலெக்டர்.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இந்த மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுணை பெருகல் கிராமத்தை சார்ந்த மாற்றுத்திறனாளி பெண்மணி சரண்யா (33) சுயதொழில் செய்வதற்கு உதவித்தொகை வழங்கக்கோரி மனு அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, அந்தமனு மீது உடனடி விசாரணை மேற்கொண்டு, உதவிதொகை பெற தகுதி உடையவர் என்பதை அறிந்து, உடனடியாக நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூபாய் 80 ஆயிரத்திற்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுகுறித்து, மாற்றுத்திறனாளி பெண்மணி சரண்யா கூறுகையில், வயதான தாய் தந்தையுடன் வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். ஏரி வேலை மற்றும் மாற்றுத்திறனாளி ஓய்வுதியம் வைத்துதான் மருத்துவ செலவு மற்றும் குடும்ப செலவுகளையும் பார்த்துக்கொள்கிறோம்.

இந்நிலையில், மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் சுய தொழில் செய்வதற்கு உதவித்தொகை வழங்கக்கோரி மனு அளித்திருந்தேன். மனு அளித்த 30 நிமிடத்திற்குள், உடனடியாக பரிசீலித்த, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அவர்களின் விருப்புரிமை நிதியிலிருந்து பெட்டிக்கடை வைப்பதற்காக, 80 ஆயிரம் ரூபாய்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

top videos

    உடனுக்குடன் நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். இந்த நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    First published:

    Tags: Kanchipuram, Local News