முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சியில் இருளர் இன குழந்தையின் உடல்நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆட்சியர்- உடனே அதிகாரிகளுக்கு போட்ட உத்தரவு

காஞ்சியில் இருளர் இன குழந்தையின் உடல்நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆட்சியர்- உடனே அதிகாரிகளுக்கு போட்ட உத்தரவு

காஞ்சிபுரம் ஆட்சியர்

காஞ்சிபுரம் ஆட்சியர்

Kanchipuram | காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருளர் இன கைக்குழந்தையின் உடல் நலம் குறித்து பெற்றோரிடம் ஆட்சியர் நலம் விசாரித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி தலைமையில் இன்று நடைபெற்றது. அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொது மக்கள் வந்திருந்தனர்.

இக் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டத்திற்கு உட்பட்ட திருவானைக்கோயில் கிராமத்தில் வசிக்கும் இருளர் இனத்தைச் சேர்ந்த 12 பயனாளிகளுக்கு பினாயூரில், 5.76 லட்ச ரூபாய் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி வழங்கினார். அதன் பின் பயனாளிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்நிகழ்வின் போது இலவச வீட்டுமனை பட்டா பெற்ற இருளர் இனத்தைச் சேர்ந்த பெண் பயனாளியான கங்காதேவி என்பவர் தனது கைக்குழந்தையுடன் வந்திருந்ததைக் மாவட்ட ஆட்சியர் கண்டார். அப்போது, அந்தகுழந்தை சற்று சத்து குறைப்பாடாகவும், எடை குறைவாகவும் உள்ளதை கவனித்து, அக்குழந்தை குறித்து அவரது தாய் கங்காதேவியிடம் நலம் விசாரித்தார்.

குறிப்பாக குழந்தையின் வயது, குழந்தை அங்கன்வாடி மையத்திற்கு தினமும் செல்கிறதா, ஏன் குழந்தை எடை குறைவாகவும், சத்து குறைவாக இருக்கிறது என குழந்தையின் உடல் நலம் குறித்து தாய் உள்ளத்தோடு குழந்தையின் தாயான கங்காதேவியிடம் மாவட்ட ஆட்சியர் நலம் விசாரித்தார். உடனடியாக கூட்டரங்கில் இருந்த மாவட்ட சுகாதாத் துறை இணை இயக்குனர் பிரியா ராஜை அழைத்து குழந்தையின் சத்துக்களை அதிகரிக்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

அதன் பேரில் மாவட்ட சுகாதாத் துறை இணை இயக்குனர் அக்குழந்தை குறித்து அவரது தாயிடம் விசாரித்து அவரது முகவரி, குழந்தையின் வயது உள்ளிட்ட குழந்தை தொடர்பான தகவல்களை சேகரித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்திட தனது துறை அதிகாரியிடம் அறிவுறித்தினார்.

”நான் வெளியே வந்துட்டேன்” பிறந்த குழந்தை பேசியதா? தீயாய் பரவும் தகவல்!

குழந்தை வசிக்கும் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதர நிலையம் மூலமாக குழந்தையின் உடல் நலம் பேணுவதற்க்கான நடவடிக்கை எடுக்கப்படும் என குழந்தையின் தாயாரிடம் உறுதியளித்தனர்.  மாவட்ட ஆட்சியரின் இந்தச் செயல் அங்கு கூடியிருந்த மக்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

First published:

Tags: Kanchipuram, Local News