முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு சொன்ன ஆட்சியர்!

காஞ்சிபுரம் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு சொன்ன ஆட்சியர்!

காஞ்சிபுரம் ஆட்சியர்

காஞ்சிபுரம் ஆட்சியர்

Kanchipuram collector | கடந்த 6 மாதங்களில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 190 சட்ட ரீதியான உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டதில் 23 நிறுவனங்கள் மீது பாதுகாப்பற்ற உணவு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரத்தில் பொதுமக்கள் உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் தரம் பற்றிய புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர்.மா.ஆர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்‌.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த 27.04.2023 அன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் மதிப்பிற்குரிய திருப்பெரும்புதுார் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் அறிவுறுத்தலின் படி காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் உள்ள உணவகங்களில் மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் மூன்று குழுவாகக் கொண்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 29.04.2023 அன்று ஆய்வு மேற்கொண்டனர்.

29.04.2023 அன்று உணவகங்கள் அதிகம் உள்ள காந்தி ரோடு மற்றும் நடுத்தெருவில் உள்ள 41 உணவு நிறுவனங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவற்றில் 16 உணவங்கள், 2 பேக்கரிகள், 7 பழங்கள் ஜீஸ் கடைகள், 12 சில்லறை விற்பனை கடைகள், 4 பெட்டி கடைகள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வில் 31 கிலோ அழுகிய பழங்கள், 2 கிலோ கெட்டுப்போன இறைச்சி, 10 பெட்டிகள் செயற்கை நிறமிகள் கைப்பற்றப்பட்டு பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டன. இவ்வாய்வில் உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை பின்பற்றாத 17 உணவு நிறுவனங்களுக்கு (Notice) அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. 3 உணவு நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், பைகள், பயன்படுத்தியதால் தலா ரூ.2000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 190 சட்ட ரீதியான உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டதில் 23 நிறுவனங்கள் மீது பாதுகாப்பற்ற உணவு விற்பனை செய்த வகையில் (Judicial Magistrate) நீதி மன்றங்களில் கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. 40 உணவு நிறுவனங்கள் மீது தரம் குறைவாக மற்றும் தப்புக்குறியிடப்பட்டது என்ற வகையில் மாவட்ட வருவாய் அலுவலர் முன்பு சிவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. தொடரப்பட்ட 40 சிவில் வழக்குகளின் விசாரணை முடிந்து மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் ரூ.5,04,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க | சித்ரா பௌர்ணமியையொட்டி காஞ்சிபுரம் சித்திரகுப்தர் கோவிலில் சிறப்பு வழிபாடு!

14 கிரிமினல் வழக்குகளில் ரூ.5,15,000/- அபாரதம் விதிக்கப்பட்டு 1 நாள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதால் 46 உணவு நிறுவனங்களில் தலா ரூ.2000/-என்று ரூ.96000/- அபராதம் விதிக்கப்பட்டு துறையால் வசூலிக்கப்பட்டுள்ளது.

தினசரி ஆய்வுகளில் உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006 விதிகளை கடைபிடிக்காத 98 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அவற்றை சரி செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டு மறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. FSSAI உரிமம் இல்லாமல் செயல்பட்ட 31 நிறுவனங்களுக்கு பிரிவு 63-ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டு உரிமம் எடுக்கப்பட்டுள்ளது. சுத்தம் சுகாதாரம் இல்லாமல் செயல்பட்ட 12 உணவகங்களுக்கு பிரிவு 32ன் கீழ் மேம்பாட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கோடைகாலம் என்பதால் தினசரி ஜீஸ் விற்பனை கடைகள், மாம்பழம், தர்பூசணி விற்பனை கடைகள், 20 லிட்டா கேன் குடிநீர் விநியோகம், தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் தரம் பற்றிய புகார் தொரிவிக்க 94440 42322 என்ற வாட்சப் எண்ணில் புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர்.மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Kanchipuram, Local News