முகப்பு /காஞ்சிபுரம் /

"நீர்நிலைகளை பாதுகாக்காவிடில் அழிவை நோக்கி போய் விடுவோம்" - காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி 

"நீர்நிலைகளை பாதுகாக்காவிடில் அழிவை நோக்கி போய் விடுவோம்" - காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி 

காஞ்சிபுரம் கலெக்டர்

காஞ்சிபுரம் கலெக்டர்

Kanchipuram News : நீர்நிலைகளைப் பாகாக்கத் தவறினால் விரைவில் அழிவை நோக்கிப் போய் விடுவோம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி பேசினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் அவரது அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்ட மையத்தில் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத் துறை சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மருத்துவத்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) மலர்விழி, சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரியாராஜ், மாவட்ட ஊராட்சி குழுவின் தலைவர் படப்பை ஆ.மனோகரன், காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தினை குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்து ஆட்சியர் மேலும் பேசுகையில், 'நாம் நீர்நிலைகளை பாதுகாக்காமல் இருந்து விட்டால் விரைவில் அழிவை நோக்கிப் போய் விடுவோம். நீர்நிலைகள் தான் நம் நாட்டின் சொத்து. அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டால் நம்மையும், நம் சந்ததியையும் காப்பாற்ற முடியும். குப்பைகளை கண்ட இடங்களில் போடாக்கூடாது என்பதையும், போட்டால் ஏற்படும் தீமைகளையும் குறித்து கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மாற்றம் என்பது அரசு ஊழியர்களிடமிருந்து தான் தொடங்க வேண்டும். அதற்கான முழுப் பொறுப்பும் நமக்கு உள்ளது. கிராமங்களில் போதுமான கட்டமைப்புகள் இருந்தும் பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை என்பது வருத்தமளிக்கிறது. அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன செய்தோம் என்பதை தவிர்த்து விட்டு இப்போது நமக்கு நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நாம் உணர வேண்டும்.

சுகாதாரமாக இருப்பதற்கு அரசால் மட்டுமே இயலாது.பொதுமக்களும் இணைந்தால் மட்டுமே சுகாதாரமான மாவட்டமாக காஞ்சிபுரத்தை மாற்ற முடியும்" என்று ஆட்சியர் பேசினார். இந்த கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Kanchipuram, Local News