ஹோம் /காஞ்சிபுரம் /

காஞ்சியில் இலவச வீட்டு மனை பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்கிய ஆட்சியர்

காஞ்சியில் இலவச வீட்டு மனை பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்கிய ஆட்சியர்

X
நலத்திட்ட

நலத்திட்ட உதவி வழங்கும் ஆட்சியர்

Kanchipuram | காஞ்சியில் 28 பயனாளிகளுக்கு ரூ.44.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வழங்கினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சியில் 28 பயனாளிகளுக்கு ரூ.44.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் திங்கள் தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது. அதன்படி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் பொதுமக்களிடம் இருந்து 255 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்கள்.

காஞ்சிபுரம்- வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை - விண்ணப்பிக்கும் வழிமுறை இதுதான்...

மேலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஶ்ரீபெரும்புதூர் வட்டம், மதுரமங்கலம் குறுவட்டம், கண்ணந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த 13 பயனாளிகளுக்கு ரூ.5,65,500/- மதிப்பில் வீட்டுமனை பட்டாக்களையும், காஞ்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட திருப்புக்குழி, சிறுகாவேரிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 15 பயனாளிகளுக்கு ரூ 38,97,400/- மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

செய்தியாளர்: கார்த்திக், காஞ்சிபுரம்.

First published:

Tags: Kanchipuram, Local News