முகப்பு /காஞ்சிபுரம் /

ஏரி சீரமைப்பு பணிகளில் முறைகேடு... காஞ்சியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஏரி சீரமைப்பு பணிகளில் முறைகேடு... காஞ்சியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

X
தமிழக

தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பும் பாஜகவினர் 

kanchipuram protest | காஞ்சிபுரம் பாஜக மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன சிறப்புரை ஆற்றினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram | Kancheepuram (Kanchipuram)

தமிழகத்தில் ஆளும் திமுக அரசு பொதுப்பணி துறையின் மூலம் மாவட்டங்கள் தோறும் பல கோடி ரூபாய் செலவில் ஏரிகளை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை தரமற்ற முறையில் செய்து முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணி துறையின் சார்பில் 30 ஏரிகளில் தரமற்ற முறையில் சீரமைப்பு பணிகளையும் முறைகேடுகளையும் கண்டித்து காஞ்சிபுரம் மேற்கு ஒன்றியம் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே நடைபெற்றது.

பாஜக காஞ்சிபுரம் மேற்கு ஒன்றிய துணைத் தலைவர் தமிழரசன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் கே எஸ் பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன சிறப்புரை ஆற்றினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் டி வாசன் மாவட்ட துணைத் தலைவர்கள் விஸ்வநாதன் செந்தில் குமார் காஞ்சிபுரம் நகர மேற்கு மண்டல தலைவர் ஜீவானந்தம் ஞான சூரியன் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு அணிகளின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தமிழகத்தில் ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

First published:

Tags: BJP, DMK, Kanchipuram, Local News, Protest