கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உலகப் புகழ்பெற்ற அத்திவரதர் கோவில் என்றழைக்கப்படும் 108 திவ்யதேசங்களில் 44வது திவ்யதேசமாக விளங்குகிற காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆந்திரா, கர்நாடகா, பெங்களூர், கேரளா போன்ற அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். அதேபோல் உள்ளூர் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த கோவிலுக்கு வருகைப்புரிந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இக்கோவிலில் மேற்கு, கிழக்கு என 2 ராஜகோபுரங்கள் உள்ளன. குறிப்பாக இக்கோவிலின் பிரதான நுழைவு வாயிலாக கோவில் முன்பக்கம் அமைந்துள்ள மேற்கு ராஜகோபுரம், 96 அடி உயரமும், 92.5 அடி அகலம் உடையது. அதேபோல் கோவில் பின்புறமுள்ள கிழக்கு ராஜகோபுரம் 125 அடி உயரமும், 99 அடி அகலமும் உடையது. பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவிலில் பின்புறமுள்ள கிழக்கு ராஜகோபுரத்தில் உள்ள 11 கலசங்களில் 2 கலசங்கள் சேதமடைந்துள்ளது.
மேலும் ஒரு சில கலசங்கள் லேசாக சாய்ந்த நிலையிலும் உள்ளவாறு காட்சியளிக்கிறது. இது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த கிழக்கு ராஜகோபுரத்தில் உள்ள பழைய கலசங்களை அகற்றிவிட்டு அதற்கு மாற்றாக புதிய கலசங்கள் அமைக்க வேண்டும் என பக்தர்களும், காஞ்சி மாநகரவாசிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News