முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி மாத திருப்பாத சேவை உற்சவம்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி மாத திருப்பாத சேவை உற்சவம்!

X
வரதராஜ

வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி மாத திருப்பாத சேவை உற்சவம்

Kanchipuram Varadaraja Perumal Temple | காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி மாத பெருந்தேவி தாயார் திருப்பாத சேவை உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி மாத திருப்பாத சேவை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான உலக பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோயில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி மாதம் கடை வெள்ளிக்கிழமையொட்டி ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பெருந்தேவி தாயார் திருப்பாத சேவை உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

திருப்பாத சேவை உற்சவத்தையொட்டி பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வெள்ளை பட்டு உடுத்தி வைர வைடூரிய ஆபரணங்கள் அணிவித்து, மல்லிகைப்பூ, செண்பகப்பூ, கனகாம்பரப்பூ, மலர் மாலைகள் அணிவித்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி மாத திருப்பாத சேவை உற்சவம்

இதையும் படிங்க : 10 ரூபாய்க்கு அன்லிமிட்டெட் சாப்பாடு.. ஈரோட்டில் பிரபலமாகும் ஹோட்டல்!

பின்னர் மேளதாளம், பேண்டு வாத்தியங்கள் முழங்க கோவிலின் ஆழ்வார் பிரகாரங்களில் உலா வந்து வேதபாராயண கோஷ்டியினர் பாடிவர வசந்த மண்டபத்தில் பெருந்தேவி தாயாரைஎழுந்தருள செய்து தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வெள்ளை பட்டு உடுத்தி ஆண்டுக்கு ஒரு முறை திருப்பாதத்தை வெளியே காட்டிதிருப்பாததரிசனம் தரும் பெருந்தேவி தாயாரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

First published:

Tags: Kanchipuram, Local News