முகப்பு /காஞ்சிபுரம் /

நடாவாவி கிணற்றில் எழுந்தருளிய காஞ்சி வரதராஜ பெருமாள்!

நடாவாவி கிணற்றில் எழுந்தருளிய காஞ்சி வரதராஜ பெருமாள்!

X
நடாவாவி

நடாவாவி கிணற்றில் எழுந்தருளிய காஞ்சி வரதராஜ பெருமாள்

Kanchipuram Varadharaja Perumal Temple : சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஐயங்கார் குளம் கிராமத்தில் உள்ள நடாவாவி கிணற்றில், வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

  • Last Updated :
  • Kanchipuram, India

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சித்ரா பௌர்ணமி தினத்தன்று காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார்குளம் கிராமம் நடவாவி கிணற்றில் உற்சவம் கண்டருள்வது வழக்கம்.

அதன்படி, திருக்கோவிலில் இருந்து புறப்பட்ட வரதராஜப் பெருமாள் பல்வேறு கிராமங்கள் வழியாக ஐயங்கார் குளம் கிராமம் சஞ்சீவிராயர் திருக்கோயிலில் எழுந்தருளினார். இங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, பச்சை கரை வெண்பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், மல்லிகை பூ, செண்பகப்பூ மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு ஐயங்கார் குளம் நடவாவி கிணற்றுக்குள் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.

நடாவாவி கிணற்றில் எழுந்தருளிய காஞ்சி வரதராஜ பெருமாள்

பூமிக்கு அடியில் 20அடி ஆழத்தில் 12 ராசிகளை குறிக்கும் தூண்களுடன் அமைந்துள்ள நீராழி மண்டப நடவாவி கிணற்றில் எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டதை தொடர்ந்து மூன்று முறை மண்டபத்தைச் சுற்றி வலம் வந்து மீண்டும் கிணற்றிலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    நடவாவி கிணற்றிலிருந்து எழுந்தருளிய வரதராஜ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்து கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு வணங்கி வழிபட்டனர். இதை தொடர்ந்து வேத பாராயண கோஷ்டியினர் பாடி வர பாலாற்றில் எழுந்தருளி சித்ரா பௌர்ணமி உற்சவம் கண்டருளினார். கனமழையையும் பொருட்படுத்தாமல் அதிகளவில் பக்தர்கள் திரண்டு வந்து நடவாவி உற்சவத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    First published:

    Tags: Kanchipuram, Local News