முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்.. மஞ்சள் பட்டுடுத்தி காட்சியளித்த பெருமாள்..

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்.. மஞ்சள் பட்டுடுத்தி காட்சியளித்த பெருமாள்..

X
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்

Kanchipuram Vaikunta Perumal Temple : காஞ்சிபுரம் வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்குவதுமான, வைகுண்ட பெருமாள் திருக்கோவில் என அழைக்கப்படும் அருள்மிகு வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

வைகாசி மாத பிரம்மோற்சவ கருட சேவை உற்சவத்தை முன்னிட்டு வைகுண்ட பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து மஞ்சள் பட்டு உடுத்தி திருவாபரணங்கள் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருள செய்தனர்.

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்

பின்னர், கருட வாகனத்தில் காட்சியளித்த வைகுண்ட பெருமாளுக்கு சிறப்பு ஆரத்தி காண்பிக்கப்பட்டு, வேத மந்திரங்கள் ஒலிக்க, மேளதாளம் முழங்க காஞ்சி நகரின் 4 ராஜ வீதிகளில் திருவீதி உலா வந்தார்.

இதையும் படிங்க : ஈரோடு அருகே இப்படி ஒரு அருவி இருக்கா? கோடை காலத்தை கழிக்க சூப்பர் ஸ்பாட்!

வைகாசி மாத பிரம்மோற்சவ கருட சேவை உற்சவத்தில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Kanchipuram, Local News