முகப்பு /காஞ்சிபுரம் /

பிளாஸ்டிக்கை ஒழிக்க காஞ்சிபுரத்தின் முக்கிய இடங்களில் மஞ்சப்பை இயந்திரங்கள்..

பிளாஸ்டிக்கை ஒழிக்க காஞ்சிபுரத்தின் முக்கிய இடங்களில் மஞ்சப்பை இயந்திரங்கள்..

X
மாதிரி

மாதிரி படம்

Kanchipuram Collector Aarthy : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில், வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய இரு இடங்களில் வைக்கப்பட்டுள்ள மஞ்சப்பை இயந்திரங்களின் திறப்பு விழா நடைபெற்றது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்கிடும் வகையில் முக்கிய கோவில்களில் மஞ்சப் பை வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக உருவாக்கிடும் வகையில் பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை நிறுத்தும் வகையில் மீண்டும் மஞ்சள் பை பயன்பாட்டினை கொண்டுவர பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 10 ரூபாய்க்கு மஞ்சள் பைகளை வழங்கிடும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில், வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய இரு இடங்களில் வைக்கப்பட்டுள்ள மஞ்சப்பை இயந்திரங்களின் திறப்பு விழா நடைபெற்றது.

காஞ்சிபுரத்தின் முக்கிய இடங்களில் மஞ்சப்பை இயந்திரங்கள்

இந்த விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி காஞ்சிபுரம் எம்.பி கா.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மஞ்சள் பை இயந்திரங்களின் பயன்பாட்டை தொடங்கி வைத்தனர்.

விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, துணை ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கு பிரகாஷ் மற்றும் மாசுக்கட்டுப்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இது குறித்து நியூஸ் 18 உள்ளூர் செய்திக்கு சிறப்பு பேட்டியளித்த மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் நெகிழி பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில், மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்களில், மஞ்சப் பை இயந்திரங்கள் அமைக்கப்பட்டுவதாகவும், மேலும் இந்த இயந்திரங்கள் மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அடுத்தடுத்து நிறுவப்பட இருருப்பதாகவும் தெரிவித்தார்.

    First published:

    Tags: Kanchipuram, Local News