முகப்பு /காஞ்சிபுரம் /

வள்ளலார் தைப்பூச திருவிழாவை  முன்னிட்டு அன்னதானம் வழங்கிய காஞ்சி சேலை இராமசாமி தெருவாசிகள்!!!!

வள்ளலார் தைப்பூச திருவிழாவை  முன்னிட்டு அன்னதானம் வழங்கிய காஞ்சி சேலை இராமசாமி தெருவாசிகள்!!!!

X
வள்ளலார்

வள்ளலார் தைப்பூச திருவிழாவில் மக்களுக்கு அன்னதானம் வழங்கும் தெருவாசிகள்

Kancheepuram Thaipusam | தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இராமலிங்க அடிகளார் திருவுருவ சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு இராமலிங்க அடிகளார் வீதி உலா நடைபெற்றது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரத்தில் வள்ளலார் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலை இராமசாமி தெருவில்,80 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருட்பிரகாச இராமலிங்க அடிகளார் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் ராமலிங்க அடிகளாரின் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் இராமலிங்க அடிகளார் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இராமலிங்க அடிகளார் திருவுருவ சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு இராமலிங்க அடிகளார் வீதி உலா நடைபெற்று பின்னர் ஜோதி தரிசனம் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இராமலிங்க அடிகளாரை தரிசனம் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனையடுத்து சேலை இராமசாமி தெரு வாசிகள் ஒன்றிணைந்து வடலூரில் உள்ள அணையா அடுப்பை போன்று ஒரு நாள் அணையா அடுப்பை பற்ற வைத்து உணவு சமைத்து காலையில் 500 பேருக்கும் மதியம் 1000 பேருக்கும் இரவில் 500 பேருக்கு உணவளித்து மிகச் சிறப்பான முறையில் தைப்பூச திருவிழாவை கொண்டாடினர். மேலும் வருடம் தோறும் வள்ளலாரின் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மூன்று வேளையும் தவறாமல் அன்னதானம் வழங்கி வருவதாக சேலை ராமசாமி தெரு வாசிகள் தெரிவித்தனர்.

First published:

Tags: Kancheepuram, Local News