ஹோம் /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 364 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன..

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 364 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன..

பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டமளிக்கும் புகைப்படம் 

பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டமளிக்கும் புகைப்படம் 

Kancheepuram at Sankara Arts and Science College convocation | இளநிலையில் 138 பேரும் முதுகலையில் 76 பேர் என மொத்தம் 364 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை பாண்டிச்சேரி மத்திய பல்கலை ஆங்கிலத்துறையின் முன்னாள் தலைவர் பி.மருதநாயகம் வழங்கினார்.

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சிவக்குமார், ஆங்கிலத்துறை பேராசிரியர் விஜிகுமார் ஆகியோர் முன்னிலை நடைபெற்ற இந்த விழாவில் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விழாவில் பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழக ஆங்கிலத்துறையின் முன்னாள் தலைவர் பி.மருதநாயகம்  மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய அவர்,  கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசாத தமிழ் நூலே இல்லை என்றும் திருப்பாவையும்,திருவெம்பாவையும் வடமாநிலங்களுக்கு சென்றதோடு மட்டுமில்லாது பல நாடுகளிலும் தடம் பதித்திருப்பதாக கூறினார். இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ் இளநிலையில் 130 பேர்,முதுகலையில் 20 பேரும் ஆங்கிலப் பாடத்தில் இளநிலையில் 138 பேரும் முதுகலையில் 76 பேர் உட்பட மொத்தம் 364 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

First published:

Tags: Kancheepuram, Local News