ஹோம் /காஞ்சிபுரம் /

பைக்கிற்கு கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடிய காஞ்சிபுரம் கல்லூரி மாணவர்..

பைக்கிற்கு கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடிய காஞ்சிபுரம் கல்லூரி மாணவர்..

புதிய பைக்கை வைத்து கேக் வெட்ட செய்யும் கல்லூரி மாணவன்

புதிய பைக்கை வைத்து கேக் வெட்ட செய்யும் கல்லூரி மாணவன்

Kancheepuram Bike Cake Cutting Video | தாய்,தந்தை வாங்கிக் கொடுத்த பைக் வாங்கி ஒரு ஆண்டு நிறைவானதால் பைக் வாங்கிய நாளை அதன் பிறந்த நாளாக கருதி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தந்தையுடன் சென்று பைக்கிற்கு பூஜை செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

பைக்கிற்கு கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடிய காஞ்சிபுரம் கல்லூரி மாணவரின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சி ஆனந்தா பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி - சசி தம்பதியினர். இவர்களுக்கு சுபாஷ்,குகன் என இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகனான சுபாஷ் காஞ்சிபுரத்தில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிகாம் படித்து வரும் நிலையில் தாய், தந்தை இருவரும் சேர்ந்து மகனுக்கு ஆசையாய் பைக் ஓன்றை வாங்கி கொடுத்து உள்ளனர்.

தாய்,தந்தை வாங்கிக் கொடுத்த பைக் வாங்கி ஒரு ஆண்டு நிறைவானதால் பைக் வாங்கிய நாளை அதன் பிறந்த நாளாக கருதி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தந்தையுடன் சென்று பைக்கிற்கு பூஜை செய்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்னர் பைக்கை எடுத்துச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து பைக்கிற்காக பிறந்தநாள் கேக் வாங்கி அதன் டயரில் கேக் வெட்டும் கத்தியை கட்டி பைக்கே பிறந்தநாள் கேக்கை வெட்டுவது போல செய்து நண்பர்களுடன் சேர்ந்து உற்சாகமாக பைக்கிற்கு பிறந்தநாளை கொண்டாடி, கேக்கை ஊட்டி மகிழ்ச்சி அடைந்து உள்ளார்.

பைக்கிற்கு பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய செயல்,கல்லூரி மாணவர் சுபாஷ் தன்னுடைய பைக்கை எவ்வளவு பாசத்துடன் நேசிக்கிறார் என்பதை காட்டியுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Kancheepuram, Local News