முகப்பு /காஞ்சிபுரம் /

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர் கல்வி உதவித்தொகை -காஞ்சிபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு...

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர் கல்வி உதவித்தொகை -காஞ்சிபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு...

ஆட்சியர் ஆர்த்தி 

ஆட்சியர் ஆர்த்தி 

Kancheepuram News | பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அஞ்சலக ஊழியர்கள் பள்ளிகளில் முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2022-2023ஆம் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினமாணவர்களுக்கு ப்ரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் ஆதார் எண் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்க இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் (India Post Payments Bank) வங்கியுடன் இணைந்து அந்தந்த  பள்ளிகளிலேயே மாணாக்கர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி மாணாக்கர்கள் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்கி பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 7,899 மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாமல் இருந்தது.கடந்த 10 நாட்களாக பள்ளிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 1,427 மாணவர்களுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6472 மாணவர்களுக்கு வரும் 25ஆம் தேதிக்குள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அஞ்சலக ஊழியர்கள் பள்ளிகளில் முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும். அஞ்சலக வங்கி கணக்கு துவங்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என, பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பெற்றோர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Kancheepuram, Local News