முகப்பு /காஞ்சிபுரம் /

சங்கிலித்தொடராய் நின்ற 500 ஆசிரியர்கள்.. காஞ்சிபுரத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம்..

சங்கிலித்தொடராய் நின்ற 500 ஆசிரியர்கள்.. காஞ்சிபுரத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம்..

X
காஞ்சிபுரத்தில்

காஞ்சிபுரத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம்

Kanchipuram News | பல்வேறு கோரிக்கைககளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Kanchipuram, India

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைககளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், சம வேலைக்கு சம ஊதியம், இடைநிலை முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைதல், தொகுப்பூதியம் மதிப்பூதிய முறைகளை ஒழித்தல், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்தல், சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் ஊரக பகுதி செவிலியர்கள் ஊர்ப்புற நூலகர்கள் ஊராட்சி செயலர்களை பணி நிரந்தரம் செய்தல்,

முடக்கப்பட்ட அகவிலைப்படி விடுப்பு ஒப்படைப்பு உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் வட்டார ஜாக்டோஜியோ சார்பில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கழுத்தில் கோரிக்கை பதாகைகளை மாட்டிக் கொண்டு சங்கிலித்தொடராய் நின்று கோரிக்கைகளை முழங்கினர்.

இதையும் படிங்க : அன்னவாசல் அருகே ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு.. சோகத்தில் மூழ்கிய கிராமம்..

இந்த மனித சங்கிலிப் போராட்டதிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான லெனின், வெங்கடேசன், ஜெய்சங்கர் ஆகியோர் கூட்டுத்தலைமை ஏற்றனர். காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தேவராஜன், பழமலைநாதன், செல்வவிநாயகம், குமார், ரமேஷ், தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    ஆசிரியர் - அரசு ஊழியர் சங்கங்களின் மாநில மாவட்ட ஒன்றிய வட்டார நகராட்சி பொறுப்பாளர்களும் பெருந்திரளாக பங்கேற்றனர். மேலும் ஜாக்டோ ஜியோ வின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழுவினர் ஆலோசித்து அறிவிப்பார்கள் ஜாக்டோஜியோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

    First published:

    Tags: Kanchipuram, Local News