உத்திரமேரூரில் சாலையோர மரம் வெட்டும் பொழுது மரம் விழுந்த விபத்தில் ஒரு மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் ஜேசிபியில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அவலம் அரங்கேறியது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் உள்ள உத்திரமேரூர்- வந்தவாசி சாலையில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் சுமார் 5 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கம் மற்றும் கால்வாய் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. இந்த பணியின் போது உத்திரமேரூர் அங்காளம்மன் கோவில் அருகே சாலையோரம் இருந்த புளியமரத்தை மின் கம்பத்திற்கு இடையூராக உள்ளதாக கூறி மின் வாரிய அலுவலகமும் நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து மரத்தை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.
மரம் வெட்டும் பணியில் உத்திரமேரூர் அருகே உள்ள காக்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்ற கூலித் தொழிலாளியும் ஈடுபட்டு உள்ளார். எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் கூலி தொழிலாளிகள் மரம் வெட்டிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரம் வெட்டிய ரமேஷ் மீது மரக்கிளை ஒன்று விழுந்து படுகாயம் அடைந்து மரத்திலேயே தொங்கியபடி இருந்துள்ளார்.
இது குறித்துஉடனடியாக அவசர உதவி ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அளித்தும் அருகில் இருந்த ஆம்புலன்ஸ் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வராமல் தாமதம் ஆகி உள்ளது. இதை கண்ட பொது மக்களும், சக கூலி தொழிலாளர்களும் ரமேஷை மீட்டு ஜேசிபி இயந்திரத்தின் முன் பகுதியில் வைத்துக் கொண்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகஅழைத்துச் சென்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் ரமேஷிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவசர உதவிக்கு ஆம்புலன்ஸை அழையுங்கள் என கூறிவரும் நிலையில் சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் இருந்தும் வராமல் இருந்ததால் காயமடைந்து உயிருக்கு போராடிய கூலி தொழிலாளியை, ஜேசிபி இயந்திரத்தில் வைத்து சிகிச்சைக்காக அழைத்து வந்த சம்பவம் உத்திரமேரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kancheepuram, Local News