ஹோம் /காஞ்சிபுரம் /

காஞ்சியில் கல்லூரி மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சிகள்

காஞ்சியில் கல்லூரி மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சிகள்

X
பயிற்சியை

பயிற்சியை துவக்கி வைக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் 

Kancheepuram Disaster management Training Program | காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா கலந்து கொண்டு பயிற்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரத்தில்  ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான பேரிடர் கால பயிற்சி துவக்க விழாவை மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

பேரிடர் காலங்களில் உயிர் சேதங்களை தவிர்க்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.மேலும் பேரிடர் ஏற்படும் காலங்களில் பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து சம்மந்தப்பட்ட இடங்களுக்கு விரைவாகச் சென்று பொதுமக்களை காப்பாற்றுவதற்காக தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் சார்பில் பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில்  "ஆப்த மித்ரா" திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான பேரிடர் கால பயிற்சி துவக்க விழா நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா கலந்து கொண்டு பயிற்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் பேரிடர் மேலாண்மை பயிற்சி பெறும் தன்னார்வலர்களுக்கு வழங்க உள்ள "ஆப்த மித்ரா"பயிற்சி கையேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா வழங்க ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் பெற்றுக்கொண்டார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

12 நாட்கள் நடைபெறும் இந்த பேரிடர் மேலாண்மை பயிற்சியில் தன்னார்வலர்களுக்கு நிலச்சரிவு, வெள்ளம், சுனாமி, இடி மற்றும் மின்னல் அடிப்படை தேடல் மற்றும் மீட்பு போன்ற 26 தலைப்புகளில் பேரிடர் காலத்தில் உடனடியாக சென்று பொதுமக்களை உரிய முறையில் மீட்கும் வகையில் அவர்களை தயார் செய்யும் பொருட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, ஊரக சுகாதார துறை, மாநில பேரிடர் மீட்பு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த பயிற்சியாளர்கள் இணைந்து ஆப்த மித்ரா தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்க உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை ஏற்கனவே 215 தன்னார்வலர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த பயிற்சி மூலம் 285 தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது‌‌.

First published:

Tags: Kancheepuram, Local News