முகப்பு /காஞ்சிபுரம் /

கோவில் நிலத்துக்கு உரிய வாடகை செலுத்தியவர்களுக்கு மேளத்தாளங்கள் முழங்க மரியாதை செய்த அறநிலையத்துறை அதிகாரிகள்

கோவில் நிலத்துக்கு உரிய வாடகை செலுத்தியவர்களுக்கு மேளத்தாளங்கள் முழங்க மரியாதை செய்த அறநிலையத்துறை அதிகாரிகள்

மக்களைப் பாராட்டும் அதிகாரிகள்

மக்களைப் பாராட்டும் அதிகாரிகள்

Kanchipuram | காஞ்சிபுரத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் முறையான வாடகை கொடுத்து தங்கியிருப்பவர்களுக்கு அதிகாரிகள் வித்தியாசமான முறையில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரத்தில் வாடகைத் தொகையை நிலுவை இன்றி செலுத்தியவர்களின் வீடுகளுக்கு, மேள தாளங்கள் முழங்க சென்று சால்வை அணிவித்து, கோவில் பிரசாதம் வழங்கி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கௌரவப்படுத்தினர்.

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோவிலாக விளங்கும் கச்சபேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமாக காஞ்சிபுரம் மாநகராட்சி பிள்ளையார் பாளையம் பகுதியில் இடம் உள்ளது.

இந்த இடம் கச்சபேஸ்வரர் நகர் என்ற பெயரில் குடியிருப்பு பகுதிகளாக உருவாக்கப்பட்டு பல்வேறு தரப்பினர் 286 பேர் வீடு கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். இந்த வீடுகளுக்கு தரை வாடகையாக ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவுத் தொகையினை வாடகையாக செலுத்த வேண்டும்.

இந்நிலையில் கச்சபேஸ்வரர் நகர் பகுதியில் வீடு கட்டி குடியிருக்கும் 286 வாடகைதாரர்களில் 97 பேர் மட்டுமே வாடகையை பாக்கியின்றி செலுத்தி உள்ளனர்.

இந்நிலையில் கோவில் நிர்வாகத்திற்கு 189 வாடகைதாரர்களிடமிருந்து 3 கோடி ரூபாய்க்கு மேல் வாடகை வசூல் ஆகாமல் நிலுவையில் உள்ளது.

அத்தகைய வாடகை நிலுவையில் உள்ளவர்களின் பெயர்களை பேனர்களில் அச்சிட்டு கச்சபேஸ்வரர் நகர் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் முன்பு வைத்து உள்ளனர்.

மேலும் வாடகை செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் கோவில் நிர்வாகத்திற்கு நிலுவையின்றி வாடகை பாக்கியை செலுத்தியவர்களின் வீடுகளுக்கு மேளதாளம் முழங்க, கோவில் செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள், வாடகைதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சால்வை அணிவித்து கோவில் பிரசாதங்களை வழங்கி கௌரவித்தனர்.

காஞ்சிபுரம் ஆட்சியரிடம் வேன் ஓட்டுநர்கள் முக்கிய கோரிக்கை

மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாகச் சென்று வாடகை செலுத்தியவர்களை பாராட்டிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் வித்தியாசமான செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Kanchipuram, Local News