முகப்பு /காஞ்சிபுரம் /

29 வகையான சீர்வரிசை... இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காஞ்சிபுரத்தில் 6 ஏழை ஜோடிகளுக்கு திருமணம்!

29 வகையான சீர்வரிசை... இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காஞ்சிபுரத்தில் 6 ஏழை ஜோடிகளுக்கு திருமணம்!

X
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

Kanchipuram News | திருமணம் செய்து கொண்ட 6 ஜோடிகளுக்கும் 75ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட 29 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

  • Last Updated :
  • Kanchipuram, India

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 29 வகையான சீர்வரிசைகளுடன் காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் 6 ஏழை ஜோடிகளுக்கு சீரும் சிறப்புமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் திருக்கோவில்கள் சார்பில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச திருமணங்களை நடத்தி வைக்க உத்திரவிட்டப்பட்டிருந்தது.

அதன்படி காஞ்சிபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, குடும்ப சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, தகுதியான 6  ஜோடிகளுக்கு தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் பட்டுச்சேலை, பட்டு வேட்டி, கைக்கடிகாரம், தங்கத் தாலி, உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

மேலும் படிக்க : விவசாயத்தில் அதிக லாபம் ஈட்டுவது எப்படி? - வேளாண் நிபுணர் தரும் ஆலோசனை!

அதனைத் தொடர்ந்து, பிரசித்தி பெற்ற கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமான காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் திருக்கோவில் மண்டபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தியாகராஜன் தலைமையில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி ஆகியோர் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

பின்னர் திருமணம் செய்து கொண்ட 6 ஜோடிகளுக்கும் 75ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட 29 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    சீரும் சிறப்புமாக நடந்த இந்த திருமண விழாவில் அறங்காவலர் குழு உறுப்பினர் செல்வி, திருக்கோவில் செயல் அலுவலர்கள் தியாகராஜன், முத்துலட்சுமி, திருக்கோவில்கள் ஆய்வாளர் பிரித்திகா உள்ளிட்டோரும், மணமகன் மணமகள் வீட்டாரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

    First published:

    Tags: Kancheepuram, Kanchipuram, Local News