முகப்பு /காஞ்சிபுரம் /

அசல் பட்டு சேலையை அடையாளம் காண்பது எப்படி? - ரகசியம் உடைக்கும் காஞ்சிபுரம் பட்டு உற்பத்தியாளர்..

அசல் பட்டு சேலையை அடையாளம் காண்பது எப்படி? - ரகசியம் உடைக்கும் காஞ்சிபுரம் பட்டு உற்பத்தியாளர்..

X
வாடிக்கையாளர்

வாடிக்கையாளர் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள புதிய பட்டு சேலை 

Kancheepuram Silk Saree | பட்டுக்கு பெயர் போன காஞ்சிபுரத்தில் பட்டு சேலை வாங்க வரும் பொதுமக்கள் ஏமாறுவதை தடுக்க,அசல் பட்டு சேலையை அடையாளம் காண்பது எப்படி என்பது குறித்து பட்டு உற்பத்தியாளர் விளக்கம் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

பட்டுக்கு பெயர் போன காஞ்சிபுரத்தில் பட்டு சேலை வாங்க வரும் பொதுமக்கள் ஏமாறுவதை தடுக்க, அசல் பட்டு சேலையை அடையாளம் காண்பது எப்படி என்பது குறித்து பட்டு உற்பத்தியாளர் விளக்கம் அளித்துள்ளார்.

அசல் காஞ்சிபுரம் பட்டு சேலைகளை கண்டறிய முடியாமல் வெளியூரில் தயாரிக்கப்பட்டு காஞ்சிபுரத்தில் விற்கப்படும் போலி பட்டு சேலைகளை வாங்கி, பெரும்பாலானோர் ஏமாந்து வருகிறார்கள். மற்ற மாவட்டங்களில் நெசவு செய்யப்படும் சேலைகள், காஞ்சிபுரத்தில் விற்கப்படுவதாகவும் இந்த பட்டு சேலைகள், ஒரே தோற்றமுடையதாக நெசவு செய்யப்படுகின்றன.  இதனால்,போலிகளை கண்டறிவதில், வெளியூர்வாசிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது பட்டு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

காஞ்சிபுரத்தில் விற்கப்படும் பட்டு சேலைகள் எல்லாம், காஞ்சி சேலைகள் தானா என்பதை உறுதிப்படுத்தியபின் வாங்க வேண்டும். உண்மையான காஞ்சிபுரம் பட்டு சேலைகளுக்கும்,வெளியூர் பட்டு சேலைகளுக்கும் குறைந்த அளவே வித்தியாசங்கள் உள்ளன.

நுகர்வோரிடம் விழிப்புணர்வு இல்லாததால் இதை பயன்படுத்தி சில கடைகள், தினமும் பல லட்சம் ரூபாய் அளவுக்கு வருமானத்தை ஈட்டுகின்றன. நியாயமாக நெசவு செய்யும் நெசவாளர்கள் தவித்து வருகின்றனர் இதனால் பட்டு சேலை உற்பத்தியாளரிடம்‌ பட்டு சேலை வாங்குவதன் மூலமே இதனை தடுக்க முடியும் என தெரிவித்தார்.

First published:

Tags: Kancheepuram, Local News, Silk Saree, Tamil News