முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் மாவட்ட இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா!

காஞ்சிபுரம் மாவட்ட இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா!

X
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா

Kanchipuram District News | காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மானாம்பதியில் 49 இருளர் இன குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மானாம்பதி ஊராட்சியில் உள்ள ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வந்தனர். அவர்கள் நீண்ட காலமாக வீட்டு மனை பட்டா வழங்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே, இருளர் இன குடும்பங்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சார்பில் மானாம்பதி ஊராட்சியில் உள்ள 49 இருளர் இன குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் ஆகியோர் வழங்கினர்.

இந்நிலையில், அவர்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றியதற்கு பட்டாவை பெற்றுக்கொண்ட இருளர் இன மக்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Kanchipuram, Local News