ஹோம் /காஞ்சிபுரம் /

இனமென பிரிந்தது போதும்... காஞ்சி தேவரியம்பாக்கத்தில் மும்மதத்தினர் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா..

இனமென பிரிந்தது போதும்... காஞ்சி தேவரியம்பாக்கத்தில் மும்மதத்தினர் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா..

மும்மதத்தினர் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா

மும்மதத்தினர் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா

Pongal 2023 : காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் தலைமை ஏற்றார். சிறப்பு விருந்தினர்களாக வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்து சுந்தரம், ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். இதில் இந்து, முஸ்லிம், கிறித்தவ மதத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்களும் ஒருங்கிணைந்து தேவரியம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.

முன்னதாக மகளிர் குழுவை சேர்ந்தவர்கள் வண்ணக் கோலங்கள் இட்டு பொங்கலை உருவகப்படுத்தி பல்வேறு கோலங்கள் போட்டிருந்தனர்.இதில் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியரும் கோலப்போட்டிகளில் பங்கேற்றனர். குறிப்பாக ஆண் மாணவர்களும் கோல போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை ஏழில் துணைத் தலைவர் கோவிந்தராஜன் வார்டு உறுப்பினர்கள் ஞானவேல்,கற்பகம்,சாந்தி உள்ளிட்ட கிராம பிரமுகர்களும் இளைஞர்களும் தாய்மார்களும் திரளாக பங்கேற்று சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.

First published:

Tags: Kanchipuram, Local News, Pongal 2023