முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் வெளுத்து வாங்கிய கன மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி!

காஞ்சிபுரத்தில் வெளுத்து வாங்கிய கன மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி!

X
விடிய

விடிய விடிய பெய்த மழை 

Kanchipuram rain | காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • Last Updated :
  • Kanchipuram, India

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ளதால், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் இந்தாண்டு வழக்கத்தை விட கோடை வெயில் அதிகரித்து காணப்பட்டது. கோடை காலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்த வெப்ப நிலை காரணமாகவும், சுட்டெரித்த வெயிலாலும் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில், வழக்கத்திற்கு மாறாக, கோடை காலத்தில் காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் கன மழை வெளுத்து வாங்கியது. இந்த மழை கோடை காலத்தில் பதிவான அதிக அளவிலான மழை என்று சொல்லப்படுகிறது.

அதன்படி, காஞ்சிபுரம் மற்றும் அதன் சற்று வட்டார பகுதிகளான ஓரிக்கை,செவிலிமேடு,பொன்னேரிக்கரை,சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம்,படப்பை ,உத்திரமேரூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவில் துவங்கிய கன மழை விடிய விடிய கொட்டித்தீர்த்தது.

இந்த கனமழை காரணமாக, சாலைகளில் மழை வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மேலும் கன மழையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேரத்தில் ஆங்காங்கே சில மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொது மக்கள் அவதியடைந்தனர்.

குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய 17.64செ.மீ மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் மட்டும் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய 11.24செ.மீ மழை கொட்டித் தீர்த்தது.

இதையும் படிங்க | காஞ்சிபுரம் கோயிலுக்கு திடீர் விசிட் அடித்த ரம்யா பாண்டியன்.. வைரல் போட்டோஸ்!

வாலாஜாபாத்தில் 5மி.மீட்டரும், உத்திரமேரூரில் 4.2செ.மீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 4மி.மீட்டரும், குன்றத்தூரில் 4 மி.மீட்டரும், செம்பரம்பாக்கத்தில் 9 மி.மீட்டரூம் மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், காஞ்சிபுரம் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Heavy rain, Kanchipuram, Local News