முகப்பு /காஞ்சிபுரம் /

”ஹெல்மெட் போடுங்க பா” வாகன ஓட்டிகளை அன்புடன் கண்டித்த உதவி ஆய்வாளர்!

”ஹெல்மெட் போடுங்க பா” வாகன ஓட்டிகளை அன்புடன் கண்டித்த உதவி ஆய்வாளர்!

X
தலைக்கவசம்

தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலைக்கவசம் அணிவிக்கும் உதவி ஆய்வாளர்

Kanchipuram helmet awareness | காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலைகவசம் அணிவித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம்,வாலாஜாபாத்தில் வாலாஜாபாத் சுற்று வட்டார இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் நலச் சங்கம் சார்பில் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் 60-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி பேரணியாக சென்று தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியின் போது தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி புதிய தலைக்கவசம் அணிவித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

செங்கல்பட்டு சாலையில் துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி வாலாஜாபாத் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வளம் வந்து வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

இதில் வாலாஜாபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஸ்ரீகாந்த், இருசக்கர வாகன பழுதுப்பார்ப்போர் நலச் சங்கத் தலைவர் தயாளன்,செயலாளர் ராஜசேகர்,பொருளாளர் ராஜா,காவல்துறை காவலர்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் விற்பனையாளர்களும் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Helmet, Kanchipuram, Local News