முகப்பு /காஞ்சிபுரம் /

40 அடி நீள காற்றாலை இறக்கையுடன் மாட்டிக்கொண்ட கனரக வாகனம்.. காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்..

40 அடி நீள காற்றாலை இறக்கையுடன் மாட்டிக்கொண்ட கனரக வாகனம்.. காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்..

காற்றாலை இறக்கையுடன் மாட்டிக்கொண்ட கனரக வாகனம்

காற்றாலை இறக்கையுடன் மாட்டிக்கொண்ட கனரக வாகனம்

Kanchipuram News : காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரை 6 வழிச்சாலையாக மாற்றம் செய்யும் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அதற்காக காஞ்சிபுரம் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை 10 இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு பகுதியில் இருந்து கிருஷ்ணகிரியில் உள்ள காற்றாலைக்கு இறக்கை ஏற்றிச்சென்ற 40 அடி நீளம் கொண்ட கனரக லாரி, காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் அருகே புதியதாக கட்டப்படும் மேம்பால வளைவுகளை கடந்தபோது ஓட்டுநரின் அஜாக்கிரதையால் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே ஏறி இறங்கியது.

இதனால் தேசிய நெடுஞ்சாலையின் வலது - இடது புறங்களில் ஒரு புறம் லாரியின் முன்பக்கமும், மறுபக்கம் லாரியின் பின்பக்கமும் மாட்டிக் கொண்டது. இதனால் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து லாரி அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

First published:

Tags: Kanchipuram, Local News