முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் 3-வது நாளாக கொட்டித்தீர்த்த கனமழை! - மக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் 3-வது நாளாக கொட்டித்தீர்த்த கனமழை! - மக்கள் மகிழ்ச்சி

X
கொட்டித்தீர்த்த

கொட்டித்தீர்த்த கனமழை

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3ஆவது நாளாக இடியுடன் கனமழை பெய்துவருகிறது.

  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை காரணமாக, வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது.

அந்த வகையில் காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெப்பம் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், திடீரென கோடை மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதன்படி, காலை முதலே கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் 3-வது நாளாக மாலை நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், ஓரகடம், உத்தரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த திடீர் கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்ற நிலையில், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகினர். இருப்பினும் தொடர் மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்ததால், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

top videos
    First published:

    Tags: Kancheepuram, Local News