முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 310 பேர் மனு.. 23 பேருக்கு வீட்டுமனை பட்டா..

காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 310 பேர் மனு.. 23 பேருக்கு வீட்டுமனை பட்டா..

X
காஞ்சிபுரத்தில்

காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டம்

Kanchipuram District News | காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 23 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் 2 நாட்கள் அமைச்சர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, திட்ட இயக்குனர் செல்வகுமார், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ எழிலரசன், ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 310 பேர் தங்களது கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கிய அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மேலும் கூட்டத்தில் வருவாய் துறை சார்பில் 23 பயனாளிகளுக்கு, 25.50 லட்ச ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதைத்தொடர்ந்து, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் சாலை, தண்ணீர் தொட்டி போன்று 32 வகையான பணிகளுக்கு பணி உத்தரவுகளை அந்தந்த ஊராட்சி தலைவர்களிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

First published:

Tags: Kanchipuram, Local News