முகப்பு /காஞ்சிபுரம் /

ஓய்வூதியதாரர்களே... வீட்டிலிருந்து உங்கள் குறைகளை தெரிவிக்கலாம் : காஞ்சிபுரம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

ஓய்வூதியதாரர்களே... வீட்டிலிருந்து உங்கள் குறைகளை தெரிவிக்கலாம் : காஞ்சிபுரம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

ஓய்வூதியர்களுக்கான குறைதீர் கூட்டம்

ஓய்வூதியர்களுக்கான குறைதீர் கூட்டம்

ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் இருப்பின் அதற்கான முறையீட்டினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மே 10-ம் தேதிக்குள் அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்துவது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் மே  30-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாநில ஓய்வூதிய இயக்குநரால் நடத்தப்படவுள்ளது.

ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு ஓயவூதியம் தொடர்பாக குறைகள் ஏதேனும் இருப்பின் அதற்கான முறையீட்டினை மூன்று நகல்களில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மே 10-ம் தேதிக்குள் அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

இக்கூட்டத்தில் முறையீடுகளை அளிக்கும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்களின் சார்பாக ஒரு சங்கத்திற்கு ஒரு நிர்வாகி வீதம் கலந்து கொள்ளலாம். மே 10-ம் தேதிக்குள் பெறப்படும் முறையீடுகளின் மீது மட்டுமே குறைகளைவுடன் அறிக்கையை சம்மந்தப்பட்ட துறையிடமிருந்து பெற்று மே 30-ம் தேதி அன்று நடைபெறும் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நடவடிக்கை விவரம் தெரிவிக்கப்படும்.

top videos

    எனவே ஓய்வூதியர்கள் தங்களது முறையீடுகளை மேற்குறிப்பிட்ட தேதிக்குள் மாவட்ட ஆட்சியர், காஞ்சிபுரம் வட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கமாறு மாவட்ட ஆட்சியர்  மா.ஆர்த்தி, தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Kanchipuram, Local News