ஹோம் /காஞ்சிபுரம் /

குடியரசு தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்.. காஞ்சி கலெக்டர் அறிவிப்பு..

குடியரசு தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்.. காஞ்சி கலெக்டர் அறிவிப்பு..

காஞ்சி கலெக்டர்

காஞ்சி கலெக்டர்

Kanchipuram News : குடியரசு தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக காஞ்சிபுரம் கலெக்டர் அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள, அனைத்து கிராம ஊராட்சிகளிலும், வரும் குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி அன்று காலை 11.00 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன.

குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி அன்று நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல்ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் (People's plan campaign), மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம் மற்றும் இதர பொருட்கள் தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிக்கப்படும்.

மேலும், கிராம ஊராட்சிகள் தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு, செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்திட வேண்டும். பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ் பேனர் மூலம் வரவு செலவு கணக்கு வைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Kanchipuram, Local News