முகப்பு /காஞ்சிபுரம் /

பார்வை இழப்பை ஏற்படுத்தும் கண் நீர் அழுத்த நோய்.. காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்..

பார்வை இழப்பை ஏற்படுத்தும் கண் நீர் அழுத்த நோய்.. காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்..

X
மாதிரி

மாதிரி படம்

World Glaucoma Day | காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண் அறுவை சிகிச்சை துறை சார்பில்  உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரத்தில் உலக கண் நீர் அழுத்த நோய் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கண் நீர் அழுத்த நோய் எந்தவித அறிகுறியும் இன்றி கண் பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடியது. இந்த நோய் எந்த வயதினரையும் தாக்கக் கூடியதாகும். முக்கியமாக 40 வயதுக்கு மேற்பட்டோர் கண் பரிசோதனை செய்வது அவசியம் என்பதை வலியுறுத்தியும், கண் நீர் அழுத்த நோய் உள்ளோர் கண்டறியப்பட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மருத்துவ சிகிச்சை பெற்று பார்வை இழப்பை தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண் அறுவை சிகிச்சை துறை சார்பில் உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை விஷ்ணு காஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் பரந்தாமன் கொடியைசத்து துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியர் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த பேரணியானது, காஞ்சிபுரம் காந்தி சாலை-தேரடி பகுதியில் தொடங்கி காஞ்சிபுரம் மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தை அடைந்தது. வழிநெடுகிலும் மாணவர்கள் கண் நீர் அழுத்த நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோஷங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்திய வண்ணம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்நிகழ்ச்சியில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண் மருத்துவத்துறை தலைவர் மருத்துவர் நமிதா, மருத்துவர்கள் வேலுச்சாமி, நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    First published:

    Tags: Kanchipuram, Local News