முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கால்கள்..

காஞ்சிபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கால்கள்..

X
காஞ்சிபுரத்தை

காஞ்சிபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கால்கள்

Kanchipuram News : ஸ்ரீபெரும்புதூர் இல்ஜின் ஆட்டோ மோட்டிவ் தொழிற்சாலை சார்பில் காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கால்கள் வழங்கப்பட்டது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் கால்கள் இல்லாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் சர்க்கரை நோயினால் கால்களை இழந்த மாற்று திறனாளிகளுக்கு வாக் இந்தியா திட்டத்தின் கீழ் ஃப்ரீடம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் மருத்துவ முகாம்களை நடத்தி செயற்கை கால்கள் பொருத்த மாற்று திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

வாக் இந்தியா திட்டத்தின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் இல்ஜின் ஆட்டோ மோட்டிவ் பிரைவேட் லிமிடெட் எனும் தொழிற்சாலை தனது சமூக பொறுப்புகள் சார்ந்த நிதியிலிருந்து சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை கால்கள் செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் விழா காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கால்கள்

விழாவில் இல்ஜின் தொழிற்சாலை நிறுவனத்தின் துணைத்தலைவர் ராஜன், முதுநிலை பொது மேலாளர் ரவிச்சந்திரன் மற்றும் சிவகாஞ்சி காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் விநாயகம், ஃப்ரீடம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தன்னார்வலர் சுமதி ஆகியோர் கலந்துகொண்டு 150 மாற்றுத்திறனாளிகளுக்கு, நவீன தொழில் நுட்பத்தினால் செய்யப்பட்ட செயற்கை கால்களை வழங்கி, மாற்றுத்திறனாளிகளுக்கு பொருத்தி நடக்க வைத்தனர்.

விழாவில் தன்னார்வலர் தொண்டு நிறுவன ஊழியர்களும், தொழிற்சாலை தொழிலாளர்களும், மாற்றுத்திறனாளிகளின் உறவினர்களும் கலந்துகொண்டனர். தொடர்ந்து செயற்கை கால்களை வாங்கி பொறுத்திக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சியுடன் நடந்து சென்றது பார்ப்போரை நெகிழ்ச்சி அடைய வைத்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Kanchipuram, Local News