காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி கிளப் மற்றும் பம்மல் சங்கர நேத்ராலாயா இணைந்து காஞ்சிபுரம் ஓரிக்கை பாரதிதாசன் மேல்நிலை பள்ளி வளாகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 8 நாட்கள் கண் சிகிச்சை சிறப்பு முகாமை நடத்தினர். இந்த முகாமில் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கஜேந்திரகுமார் தலைமையிலான குழுவினர் 1,300க்கும் மேற்பட்ட பொதுமக்களின் கண்களை பரிசோதித்தனர்.
இந்தப் பள்ளி வளாகத்திலேயே மருத்துவமனையின் சிறப்பு அறுவை சிகிச்சை வாகனத்திலேயே 150 நபர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்தனர். மேலும் 245 நபர்களை மேல் கிசிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பங்குபெற்ற அனைவருக்கும் உணவு, தங்குமிடம், அறுவை சிகிச்சை கட்டணம் என அனைத்தும் இலவசமாக செய்து தரப்பட்டது. மேலும், கண் புரை அறுவை சிகிச்சை மேற்கொண்ட அனைவருக்கும் மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்பட்டன.
சிகிச்சையில் 250க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கிட்ட மட்டும் தூர பார்வை குறைபாடு உள்ள வயதானவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகளை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சி பெயர் மகாலட்சுமி யுவராஜ் பொதுமக்களுக்கு சக்திவாய்ந்த கண்ணாடியை வழங்கினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்நிலையில், இதன் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் உள்ள அருண்ஆனந்த் அரங்கத்தில் நடைபெற்றது. இம்முகாமில் ரோட்டரி கிளப் கிழக்கு தலைவர் G.முருகேஷ், செயலாளர் R.கமலேஷ் மற்றும் பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டனர். பல ஆயிரம் கட்டணம் செலுத்தி இதுபோன்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருந்த தங்களுக்கு ரோட்டரி கிளப் மற்றும் தனியார் கண் மருத்துவமனை சிறப்பான சேவை செய்ததை வாழ்நாளில் மறக்க இயலாது என பங்கு பெற்று பயனடைந்தவர்கள் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News