முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்.. நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்!

காஞ்சிபுரத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்.. நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்!

X
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மக்கள் குறைதீர் கூட்டம்

Kanchipuram news | வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வழங்கினார்.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில்,பயனாளிகளுக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தி வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில், பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து 300 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், உத்திரமேரூர் வட்டம், பெருநகர் கிராமத்தை சார்ந்த 8 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 6 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு கூரம் கிராமத்தில்,ரூ.2,70,000/- மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், 6 பயனாளிகளுக்கு ரூ.1,41,666/- மதிப்பிலான வங்கிக்கடன் மானியமும், முஸ்லீம் மகளீர் உதவும் சங்கம் மூலம் பல்வேறு தொழில் தொடங்குவதற்கு ரூ.3,85,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரா.சுமதி,மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Kanchipuram, Local News