முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் நீர்நிலை புறம்போக்கில் வசித்த 53 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா!

காஞ்சிபுரத்தில் நீர்நிலை புறம்போக்கில் வசித்த 53 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா!

X
53

53 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா

Kanchipuram News : காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்காவில் நீர்நிலை புறம்போக்கில் வசித்த 53 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்காவில் உள்ள நாயக்கன் குப்பம், இளையனார் வேலூர், மாகரல், உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஏரி,குளம் உள்ளிட்ட நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் வசித்து வந்த குடும்பங்களுக்கு வேறு இடங்களில் வீட்டுமனை பட்டா வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நாய்க்கன் குப்பம் கிராமத்தில் 18 குடும்பங்களுக்கும், இளையனார் வேலூர் கிராமத்தில் 20 குடும்பங்களுக்கும், மாகரல் கிராமத்தில் 15 குடும்பங்களுக்கும் என மொத்தம் 53 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா வாலாஜாபாத் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்றது.

வாலாஜாபாத் தாசில்தார் சிவப்பிரியா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ க.சுந்தர் கலந்து கொண்டு தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி 53 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வீட்டுமனை பட்டா வழங்கும் இந்த விழாவில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், துணைத் தலைவர் பி.சேகர், பேரூர் செயலாளர் பாண்டியன், நாய்க்கன் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரமணி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Kanchipuram, Local News