முகப்பு /காஞ்சிபுரம் /

பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்.. காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குனர் அதிரடி!

பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்.. காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குனர் அதிரடி!

X
பிளாஸ்டிக்

பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்

Kanchipuram News : காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 2 மளிகை கடைகளுக்கு, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட திட்ட இயக்குனர் செல்வகுமார் நடவடிக்கை மேற்கொண்டார்.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 2 மளிகை கடைகளுக்கு, தலாரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட திட்ட இயக்குனர் செல்வகுமார் நடவடிக்கை மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், ஏனாத்தூர் ஊராட்சியில் 'நம்ம ஊரு சூப்பர் திட்டம்' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். முன்னதாக, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட திட்ட இயக்குனர் செல்வகுமார் விழா நடைபெறும் இடத்தின் அருகாமையில் செயல்பட்டு வந்த மளிகை கடை மற்றும் உணவகங்களில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் வாங்கி செல்வதை கண்டார்.

பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்

அதனைத் தொடர்ந்து, அவர் அதிரடியாக அந்த பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்காக இருந்ததை கண்டுபிடித்தார். அதனை அதிரடியாக பறிமுதல் செய்து, அந்த 2 கடைகளுக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, மளிகை கடைகள் மற்றும் உணவகங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது என்று எச்சரித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும்,பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். அத்துடன், அந்த பகுதியில் உள்ள நெகிழிகளை உடனடியாக தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்ற உத்தரவிட்டார். இந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    First published:

    Tags: Kanchipuram, Local News