முகப்பு /காஞ்சிபுரம் /

யானைக்கால் நோய்.. காஞ்சிபுரத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரத்த தடவல் பணியின்போது திடீர் ஆய்வு!

யானைக்கால் நோய்.. காஞ்சிபுரத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரத்த தடவல் பணியின்போது திடீர் ஆய்வு!

யானைக்கால் நோய்

யானைக்கால் நோய்

Kanchipuram District | யானைக்கால் நோய் தொடர்பாக காஞ்சிபுரத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நடத்தபப்பட்ட இரத்தத் தடவல் பணியின்போது திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு யானைக்கால் நோயை கண்டறியும், இரவு ரத்த தடவல் சேகரிப்பு பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த பணியின்படி வேறு மாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்துள்ள தொழிலாளர்களை கண்டறிந்து இரவு ரத்த தடவல் சேகரிப்பு பணி செய்வது வழக்கம். இரவு 9 மணிக்கு மேல் தான் இந்த ரத்த தடவை சேகரிப்பு செய்வர். ஏனென்றால் அந்த நேரத்தில் தான் மைக்ரோ பைலேரியா என்ற நுண் புழுக்கள் மேல் ரத்த ஓட்டத்திற்கு வர ஆரம்பிக்கும் .

அந்த நேரத்தில் தான் இந்த ஆய்வை மேற்கொண்டால் மைக்ரோ பைலேரியா என்ற நுண் புழுக்களை கண்டறிய முடியும். இந்த பணியானது காஞ்சிபுரம் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஒரகடம் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில், இரவு ரத்த அளவு பணி சேகரிக்கும்போது திடீர் ஆய்வு மேற்கொண்டார். இப்பணியில் அனைத்து நெறிமுறைகளும் கடைபிடிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட மலேரியா அலுவலர் மணி வர்மா அவர்கள் உடன் இருந்தார். சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வக நுட்பனர்களிடம் ரத்த தடவல் ஆய்வின் தரம் நேரம் போன்றவற்றை கேட்டறிந்தார்.

First published:

Tags: Kanchipuram, Local News