முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் - வேளாண் கருவிகளை வழங்கிய அதிகாரிகள்

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் - வேளாண் கருவிகளை வழங்கிய அதிகாரிகள்

வேளாண் கருவிகளை வழங்கிய அதிகாரிகள்

வேளாண் கருவிகளை வழங்கிய அதிகாரிகள்

Kanchipuram News | காஞ்சிபுரத்தில்  நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் ரூ.16,56,780/- லட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா விவசாயிகளுக்கு வழங்கினார்.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டத்தில்,மார்ச் 2023 மாதம் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில்,மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பாக மாநில வேளாண் வளர்ச்சி திட்டம், இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டத்தின் கீழ் 4 வேளாண் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் இரண்டு குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 6 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

3 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் ரூ.3,795/-மதிப்பில் தார்பாலினும், வேளான்மை பொறியியல் துறை சார்பாக வேளாண் இயந்திரமாக்கல் திட்டத்தின்கீழ்9 நபர்களுக்குபவர் டில்லரும், ஒரு நபருக்கு டிராக்டரும் மொத்தமதிப்பீடுரூ.12,50,000/- மேலும், தோட்டக்கலை சார்பாக இரண்டு விவசாயிகளுக்கு கலைஞர் திட்டத்தின் சார்பில்தலா 7500/- வீதம் மானியமும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் வழங்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முனைவர் இளங்கோவன்,வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சந்திரன், கூட்டுறவு இணை பதிவாளர் ஜெயஸ்ரீ,நேர்முக உதவியாளர் (வே) க.கணேசன், உதவி செயற்பொறியாளர் தங்கராஜ்,தோட்டக்கலை துணை இயக்குநர் கௌதமன் மற்றும் முன்னோடி விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Kanchipuram, Local News