முகப்பு /காஞ்சிபுரம் /

விவசாயிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான பயிர் கடன், வேளாண் கருவிகள்.. காஞ்சிபுரம் கலெக்டர் வழங்கினார்..

விவசாயிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான பயிர் கடன், வேளாண் கருவிகள்.. காஞ்சிபுரம் கலெக்டர் வழங்கினார்..

X
 விவசாயிக்கு

 விவசாயிக்கு விசைத்தெளிப்பான் கருவியை வழங்கும் மாவட்ட ஆட்சியர்

Farmers Grievance Aay At Kanchipuram | காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளுக்கு ரூ.4,12,481 மதிப்பிலான பயிர் கடன் மற்றும் வேளாண் கருவிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, தலைமையில் நடைபெற்றது.

விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்

இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகள் விவசாயிகளுக்கு வழங்கினர். மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

கூட்டத்தில், வேளாண் கூட்டுறவு சங்கம் மூலம் 3 விவசாயிகளுக்கு ரூ.3,50,681 மதிப்பிலான பயிர் கடன்களையும், 1 விவசாயிக்கு ரூ.56,000/-மதிப்பிலான கால்நடை பராமரிப்பு கடன்கனையும் மற்றும் 1 விவசாயிக்கு ரூ.5,800 விசை தெளிப்பான் கருவியும் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்‌.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, மண்டல வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்துகொண்டனர்.

    First published:

    Tags: Kanchipuram, Local News