முகப்பு /காஞ்சிபுரம் /

பட்ஜெட்டில் விவசாய ஒதுக்கீடு குறைவு.. காஞ்சியில் கொந்தளித்த விவசாய சங்கம்!

பட்ஜெட்டில் விவசாய ஒதுக்கீடு குறைவு.. காஞ்சியில் கொந்தளித்த விவசாய சங்கம்!

மத்திய பட்ஜெட்டின் நகலை கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 

மத்திய பட்ஜெட்டின் நகலை கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 

Kanchipuram Farmers | மத்திய அரசு பட்ஜெட்டில் விவசாய ஒதுக்கீட்டை குறைத்ததை கண்டித்து காஞ்சிபுரம் காந்தி சாலையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram | Kancheepuram (Kanchipuram)

மத்திய அரசு பட்ஜெட்டில் விவசாய ஒதுக்கீட்டை குறைத்ததை கண்டித்து காஞ்சிபுரம் காந்தி சாலையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு நிதிநிலை அறிக்கையினை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனை எப்போது போல ஆளும் கட்சியினர் வரவேற்றும், எதிர்க்கட்சியினர் பொதுமக்கள் நலன் அக்கறையில்லை எனக் கூறி பட்ஜெட் வெற்று என அறிவித்து அறிக்கைகள் விடுத்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு விவசாய சங்கம் விவசாயிகளின் நலன்களை முற்றிலுமாய் புறக்கணித்த பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் பட்ஜெட் நகலை கொளுத்தி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தது.

அவ்வகையில் காஞ்சி மாவட்ட தமிழ்நாடு விவசாய சங்க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சாரங்கன் தலைமையில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பெரியார் தூண் அருகே ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் மத்திய அரசு கண்டித்து கோஷங்கள் எழுப்பி மத்திய பட்ஜெட்டின் நகலை கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க காஞ்சி மாவட்ட நிர்வாகிகள் கூறுகையில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை குறித்த அறிவிப்பை வெளியிடாமல் மத்திய அரசு ஏமாற்றியுள்ளது.அதுமட்டுமில்லாமல் உரம் மானியத்தை கடந்த ஆண்டை விட 50,000 கோடி குறைவாக ஒதுக்கி விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு ஓரளவிற்கு வாழ்வாதார பாதுகாப்பாக திகழும் ஊரக வேலை திட்ட நிதியை கடந்த ஆண்டு விட 29,400 கோடி குறைத்து பெரும் 60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யும் செய்துள்ளது

இதேபோல் உணவு மானியத்தையும் 89 ஆயிரத்து 844 கோடி குறைத்து கிராமப்புற நகர்ப்புற ஏழைகளின் வயிற்றில் இந்த பட்ஜெட் அடித்துள்ளது. இதேபோல் எந்த விதத்திலும் கிராமப்புற மக்களுக்கு உதவாத இந்த மத்திய பட்ஜெட்டை கண்டித்து பட்ஜெட் நகல் கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறினர்.

இதில் கண்டன உரையாற்றிய மாவட்ட செயலாளர் நேரு, மாவட்ட பொருளாளர் பெருமாள் ஆகியோர் உரையாற்றினர். இந்த பட்ஜெட் நகல் கொளுத்தும் போராட்டத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து உடன் கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

First published:

Tags: Agriculture, Kanchipuram, Local News