முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் கருப்படிதட்டடை ஊராட்சியில் இலவச கண்சிகிச்சை முகாம்..

காஞ்சிபுரம் கருப்படிதட்டடை ஊராட்சியில் இலவச கண்சிகிச்சை முகாம்..

X
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கருப்படிதட்டடை ஊராட்சி

Kancheepuram Latest News | காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கருப்படிதட்டடை ஊராட்சியில்,ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.பொன்னா  வெங்கடேசன், ஏற்பாட்டில் பிரபல தனியார் கண் சிகிச்சை மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை மற்றும் இலவச விழி லென்ஸ் பொருத்தும்  முகாம் நடைபெற்றது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சியில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு இலவச லென்ஸ் ஐ பொருத்தி பயனடைந்தனர்.

காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கருப்படிதட்டடை ஊராட்சியில்,ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.பொன்னா வெங்கடேசன், ஏற்பாட்டில் பிரபல தனியார் கண் சிகிச்சை மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை மற்றும் இலவச விழி லென்ஸ் பொருத்தும் முகாம்  நடைபெற்றது.

இம்முகாமில் முதியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்று கண்களில் புறை நீக்குதல், தூரப்பார்வை, கிட்டப்பார்வை, மாலைக்கண் நோய், தொடர்ச்சியான தலைவலி, கண்ணில் சதை வளர்ச்சி, பூ விழுதல் போன்ற கண்களில் ஏற்படும் பிரச்சனை குறித்தும் மற்றும் அதை சரிசெய்யும் முறைகள் குறித்தும் தெரிந்து கொண்டனர். அதை தொடர்ந்து முகாமில் பங்கேற்றவர்களுக்கு கண் மருத்துவ பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளிக்கப்பட்டும், கண்ணில் புரை உள்ளவர்களுக்கு இலவசமாக லென்ஸ் (Phaco) பொருத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் காஞ்சிபுரம் காஸ்மிக் சிட்டி தலைவர் ஆனந்த்,பொருளாளர் சண்முகம்,ராஜலட்சுமி நீரிழிவு மையம் செயலாளர் பிரகாஷ், கருப்படிதட்டடை ஊராட்சி துணைத் தலைவர் சத்யா, வார்டு உறுப்பினர் லோகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Kancheepuram, Local News