முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் வழங்கப்பட்ட ஆப்தமித்ரா திட்ட கிட்.. என்னென்ன பொருட்கள் உள்ளது தெரியுமா?

காஞ்சிபுரத்தில் வழங்கப்பட்ட ஆப்தமித்ரா திட்ட கிட்.. என்னென்ன பொருட்கள் உள்ளது தெரியுமா?

X
காஞ்சிபுரத்தில்

காஞ்சிபுரத்தில் வழங்கப்பட்ட ஆப்தமித்ரா திட்ட கிட்

Kanchipuram News : காஞ்சிபுரத்தில் ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தன்னார்வலர்களுக்கு ஆபத்து காலங்களில் உதவிடும் வகையில், பேரிடர் காலத்தில் தேவைப்படும் 14 வகையான உபகரணங்கள் கொண்ட ERK (Emergency Response Kits) வழங்கப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தன்னார்வலர்களுக்கு ஆபத்து காலங்களில் உதவிடும் வகையில் பேரிடர் காலத்தில் தேவைப்படும் 14 வகையான உபகரணங்கள் கொண்ட ERK (Emergency Response Kits)-னை வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி துவக்கி வைத்தார்.

ஆப்தமித்ரா திட்டமானது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் National Disaster Management Authority (NDMA) இணைந்து, தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் NDMA நெறிமுறைகளின் படி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்களுக்கான 12 நாட்கள் பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சிகள் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் மாவட்டத்தில் தங்களது பகுதியில் உதவிடும் வகையில் அவர்களுக்கு ஒத்திகையுடன் பயிற்சிகள் வழங்கும் திட்டமாகும்.

இந்த திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 500 தன்னார்வலர்கள் கண்டறிப்பட்டு முதல் கட்டமாக 215 தன்னார்வலர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 285 தன்னார்வர்களுக்கும் என மொத்தமாக 500 தன்னார்வலர்களுக்கு 12 நாட்கள் பேரிடர் மேலாண்மை பயிற்சியான நிலச் சரிவு, வெள்ளம், சுனாமி, இடி மற்றும் மின்னல் அடிப்படை தேடல் மற்றும் மீட்பு போன்ற 26 தலைப்புகளில் பேரிடர் காலத்தில் உடனடியாக சென்று பொது மக்களை உரிய முறையில் மீட்கும் வகையில் அவர்களை தயார் செய்யும் பொருட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, ஊரக சுகாதாரத் துறை, மாநில பேரிடர் மீட்பு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த பயிற்சியாளர்கள் இணைந்து ஆப்த மித்ரா தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், பயிற்சிகள் வழங்கப்பட்டு தன்னார்வலர்களுக்கு ஆபத்து காலத்தில் உதவிடும் வகையில் பேரிடர் காலத்தில் தேவைப்படும் 14 வகையான உபகரணங்கள் கொண்ட ERK (Emergency Response Kits)-னை முதற் கட்ட 215 தன்னார்வலர்களுக்கு வழங்கும் பணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி பயிற்சி பெற்ற ஆப்தமித்ரா தன்னார்வலர்களுக்கு முதற் கட்டமாக வழங்க துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாபு, தனி வட்டாட்சியர் பேரிடர் மேலாண்மை தாண்டவ மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Kanchipuram, Local News