முகப்பு /காஞ்சிபுரம் /

தானியங்கி எலக்ட்ரானிக் பட்டு சேலை கோர்வை தள்ளும் இயந்திரம்.. காஞ்சிபுரம் நெசவாளி அசத்தல்!

தானியங்கி எலக்ட்ரானிக் பட்டு சேலை கோர்வை தள்ளும் இயந்திரம்.. காஞ்சிபுரம் நெசவாளி அசத்தல்!

X
மாதிரி

மாதிரி படம்

Kanchipuram silk | காஞ்சிபுரம் நெசவாளி தானியங்கி எலக்ட்ரானிக் பட்டு சேலை கோர்வை தள்ளும் இயந்திரத்தை வடிவமைத்து அசத்தியுள்ளார்.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாட்டிதோப்பு - கணேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். பட்டு சேலை நெசவாளியான இவர் கடந்த 37 வருடங்களாக தனது தந்தை மற்றும் பாட்டனார் பாரம்பரியமாக செய்து வந்த பட்டு சேலை நெசவு தொழில் செய்து வருகிறார். பட்டு சேலை வடிவமைக்கும் தொழிலில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், மற்ற நெசவாளிகள் பட்டு சேலை வடிவமைக்கும் இயந்திரங்களை வெளியில் வாங்கி பயன்படுத்தி வந்த நிலையில், தனது சொந்த செலவில், பட்டு சேலை வடிவமைக்கும் இயந்திரத்தை இவராகவே வடிவமைத்து பட்டு சேலை நெசவு செய்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தற்போது புதிதாக எலக்ட்ரானிக் மூலமாக இயங்கக்கூடிய தானியங்கி கோர்வை தள்ளும் இயந்திரத்தை வடிவமைத்து அசத்தியுள்ளார். பொதுவாகவே கோர்வை ரக பட்டு சேலைகளில் சாதாரண பட்டு சேலைகளில் வரும் ஒரே நிறத்தில் இல்லாமல், பார்டர் நிறம் ஒரு நிறமாகவும் உடல் பகுதி நிறம் வேறொன்றாகவும் வடிவமைக்கப்படும்.

காஞ்சி நெசவாளி

இதனால் கோர்வை ரக பட்டு சேலைகளை வடிவமைக்கும்போது பட்டு நாடா போடுவதற்கு 2 நபர்கள் தேவைப்படுவார்கள். அதாவது கரை ஒரு நபரும் மற்றொரு நபர் உடல் பகுதிக்கும் நாடா போடுவார்கள். இந்நிலையில், இந்த நாடா போடும் செயலை மேம்படுத்த ஒரு நபர் மட்டுமே நாடா போடும் வகையில், கோர்வை போடும் இயந்திரம் உருவாக்கப்பட்டது. இருந்தாலும் அதில் நெசவாளி தன் கைகளை பயன்படுத்தி நெசவு செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஆனால், தற்போது நெசவாளி கோபாலகிருஷ்ணன் தனது சொந்த செலவில் தனது திறமையை பயன்படுத்தி எலக்ட்ரானிக் மூலமாக இயங்கக் கூடிய தானியங்கி கோர்வை தள்ளும் இயந்திரத்தை உருவாக்கி அசத்தியுள்ளார். பொதுவாகவே கோர்வை ரக சேலைகளை உருவாக்க 15 நாட்கள் ஆகும் நிலையில், தற்போது நெசவாளி கோபாலகிருஷ்ணன் தயாரித்துள்ள இந்த இயந்திரத்தின் மூலம் வெறும் 7 நாட்களில் கோர்வை ரக பட்டு சேலையை உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் கண்டுபிடித்துள்ள இயந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இது, நெசவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

First published:

Tags: Kanchipuram, Local News