முகப்பு /காஞ்சிபுரம் /

தூய்மை காஞ்சி திட்டத்திற்கு 5 எலெக்ட்ரிக் குப்பை சேகரிப்பு வாகனங்கள்..

தூய்மை காஞ்சி திட்டத்திற்கு 5 எலெக்ட்ரிக் குப்பை சேகரிப்பு வாகனங்கள்..

X
தூய்மை

தூய்மை காஞ்சி திட்டத்திற்கு 5 எலெக்ட்ரிக் குப்பை சேகரிப்பு வாகனங்கள்

Kanchipuram News | தூய்மை காஞ்சி திட்டத்திற்கு ஃபெடரல் வங்கி சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 5 எலெக்ட்ரிக் குப்பை சேகரிப்பு வாகனங்களை காஞ்சிபுரம் மாநகராட்சி மேயரிடம் வழங்கியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு கீழ் 51 வார்டுகள் உள்ளடக்கி நாள்தோறும் பல லட்சம் டன் எடையுள்ள குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கையாண்டு வருகிறது. மேலும் கடந்த ஓராண்டாகவே காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து மாநகராட்சிக்கு வழங்க கோரி விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் இயங்கும் ஃபெடரல் வங்கி தனது சமூக பங்களிப்பு நிதியினை தூய்மை காஞ்சி திட்டத்திற்கு வழங்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பேணிக்காக்க வலியுறுத்தும் நோக்கிலும் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு குப்பைகள் சேகரிக்க 10 வாகனங்கள் சுமார் 15 லட்சம் மதிப்பீட்டில் வாங்க வங்கி நிர்வாகத்திடம் அனுமதி பெற்றது.

அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 5 வாகனங்களை வழங்கிய நிலையில், தற்போது மீண்டும் 5 வாகனங்களை காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ் மற்றும் துணை மேயர் குமரகுருநாதன், ஆணையர் கண்ணன், மாமன்ற உறுப்பினர் சுரேஷ் முன்னிலையில் வட்டார வங்கி தலைவர் மீனாட்சி சுந்தரம் மற்றும் முதன்மை மேலாளர் அனிதா ஆகியோர் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து ஃபெடரல் வங்கி வட்டார தலைவர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில், “கோவில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் தூய்மையை வலியுறுத்தியும், மாநகராட்சியின் ‘என் குப்பை என் பொறுப்பு’ திட்டத்திற்கு 10 வாகனங்கள் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் வழங்க தலைமை நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது. அதன்பேரில் தற்போது இந்த வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் வலியுறுத்தும் நோக்கில் பேட்டரி வாகனங்களாக வழங்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : காஞ்சிபுரத்தில் சீனப்பயணி யுவான் சுவாங் சிற்பம்.. எப்படி வந்தது.. எந்த கோவிலில் இருக்கிறது தெரியுமா?

இதில் நகராட்சியின் அறிவிப்புகளை வெளியிடும் வகையிலும், ஒருமுறை சார்ஜ் செய்தாள் 35 கிலோமீட்டர் இயங்கும் வகையிலும், தீர்த்தடுப்பு கருவிகள், மற்றும் வாகனத்தை எளிதாக ஓட்டும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் ஆண்டில் மாநகராட்சியில் செயல்படும் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு மற்றும் கழிவறைகள் அமைப்பது குறித்து மாநகராட்சியிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதுகுறித்து தலைமை நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்படும்” என அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், வங்கியின் வட்ட வளர்ச்சி தலைமை அலுவலர் கிரிதரன் உள்ளிட்ட வங்கி அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Kanchipuram, Local News