முகப்பு /காஞ்சிபுரம் /

7 குதிரைகள் பூட்டிய சூரிய பிரபை வாகனத்தில் உலா வந்த காஞ்சி ஏகாம்பரநாதர் - பங்குனி உத்திர 2ம் நாள் உற்சவம்!

7 குதிரைகள் பூட்டிய சூரிய பிரபை வாகனத்தில் உலா வந்த காஞ்சி ஏகாம்பரநாதர் - பங்குனி உத்திர 2ம் நாள் உற்சவம்!

X
சூரிய

சூரிய பிரபை வாகனத்தில் ஏகாம்பரநாதர்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் 2ஆம் நாள் காலை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

  • Last Updated :

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் 2ஆம் நாள் காலை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பஞ்சபூத ஸ்தலங்களில் பிருத்திவி எனும் மண் ஸ்தலமாக விளங்கும் பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு ஏலவார் குழலி உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில், சுபகிருது ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாணம் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தின் இரண்டாம் நாள் காலை உற்சவத்தை முன்னிட்டு, ஏகாம்பரநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து மலர்மாலைகள் சூடி, திருவாபரணங்கள் அணிவித்து, ஏழு குதிரைகள் பூட்டிய சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளச் செய்து தூப தீப ஆராதனைகள் நடைபெற்று காஞ்சிபுரம் நகரின் முக்கிய ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உடன் ஏலவார்குழலி அம்மன் வலம் வந்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா வந்த ஏகாம்பரநாதரை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர்.

First published: